விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி மூலம்
இயங்கும் மின்சார மோட்டார் அறிமுக நிகழ்ச்சியை நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜே.டி.
வெங்கடேஸ்வரலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் இணைப்பு இல்லாத இடத்திலும், மின் இணைப்பு
வழங்க இயலாத இடத்திலும் ஆழ்துளைக் கிணறுகளை ஏற்படுத்தி அதன்மூலம் சூரிய சக்தியில் இயங்கும்
மின்சார மோட்டார்களை பயன்படுத்தி வேளாண் தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற
மோட்டார்களையும், சூரிய சக்தியை சேமிக்கும் மின்சார சேமிப்பு கருவிகளையும் நபார்டு
வங்கி உதவியுடன், கோவையைச் சேர்ந்த சூர்யா சோலார் பவர் மேஜிக் என்ற நிறுவனம் 40%மானியத்தில்
வழங்கி வருகிறது.
இதன்மூலம், தினசரி 7 முதல் 8 மணி நேரம் வரையில் தண்ணீர்
பாய்ச்ச முடியும். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக இந்திய அஞ்சல்
துறையும், சூர்யா நிறுவனமும் இணைந்து 3 மாத காலத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய மண்டலத்தில் 100 கிளை அஞ்சலகங்கள்
தேர்வு செய்யப்பட்டு அதில் விவசாயிகளுக்கு இத்திட்டம் குறித்து விளக்கவும், அவர்களுக்கு
சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் மற்றும் சாதனங்களை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்று பயனடைய விரும்புவோர், திருச்சி கோட்ட
அஞ்சலகத்தை 0431-2414149, ஸ்ரீரங்கம் 0431-2432382, கரூர் 04324-260980, அல்லது
98653-49906, 94438-47055 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment