Thursday, September 10, 2015

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்: வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம்



வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின், நொய்யல் கால்நடை மருந்தகம் சார்பில், திருக்காடு துறை பஞ்சாயத்து நடையனூரில் கால்நடை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், நொய்யல் கால்நடை உதவி மருத்துவர் தமிழரசன் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவர் கல்பனா ஆகியோர் தலைமையில் ஆய்வாளர் நாகராஜன் உதவியாளர்கள் மாலதி, மீரா ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகள், கன்று குட்டிகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். 200 வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. 100 கோழிகளுக்கு ரேனிகட் தடுப்பூசியும், 10 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டது. முகாமில், பசு மற்றும் எருமைகளுக்கு சினை பரிசோதனை செய்யப்பட்டது. சிறந்தமுறையில் வளர்க்கப்பட்ட பெண் கன்றுகளுக்கு பஞ்சாயத்து தலைவர் மரகதம் பரிசு வழங்கினார். கரூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் பங்கேற்று விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:

Post a Comment