ப.வேலூர்: பரமத்தி வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் குருலிங்கம் வெளியிட்ட அறிக்கை: பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. மழை நீரை பயன்படுத்தி, அதிகளவில் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட, நாற்றங்கள் விடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் நாற்றங்கால் பயிரிடும் விவசாயிகளுக்கு, நெல் சான்று பெற்ற விதைகளான, பி.பி.டி., 520 ரகம், ஆடுதுறை, 45, உள்ளிட்ட விதை நெல் ரகங்கள், போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் விதை கிராமத்திட்டத்தின் கீழ், ஒரு கிலோ சான்று பெற்ற விதை நெல்லுக்கு, 10 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. விதைநெல் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, மானித்தில் விதை நெல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=1338974
No comments:
Post a Comment