Thursday, September 10, 2015

தோட்டக்கலை பயிரை ஊக்குவிக்க மானியம் ரூ.2.80 கோடி ஒதுக்கீடு




சிவகங்கை:மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2.80 கோடி மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட அளவில் 13,500 எக்டேரில் பழமரங்கள், முந்திரி, காய்கறி மற்றும் மலர் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், விவசாயிக்கு 4 எக்டேர் பரப்பிற்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வெண்டை, கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு காய்கறி நாற்று வழங்கப்படுகிறது.
எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 200 எக்டேருக்கு மானியம் வழங்கப்படும். மா அடர் நடவு சாகுபடிக்கு ரூ.6.88 லட்சம் மானியமும். உயர் விளைச்சல் ரக கொய்யா சாகுபடிக்கு ரூ.2.28 லட்சமும், வீரிய ஒட்டு ரக பப்பாளி ரகங்கள் சாகுபடிக்கு 130 எக்டேருக்கு ரூ.29.25 லட்சம் மானியம் உண்டு.
முந்திரி ஒட்டு கன்றுகள் எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியத்தில், 100 எக்டேருக்கு வழங்கப்படும். மல்லிகை சாகு
படியில் எக்டேருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் 80 எக்டேருக்கு மானியம் உண்டு.
இது போன்று பசுமை குடில்,நிழல் வலை, நிலப்போர்வை, தேனீ வளர்ப்பு, பண்ணை இயந்திரங்கள் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 400 விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சியும் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=1339010

No comments:

Post a Comment