ஷாகிவால் நாட்டு இனப் பசு மாடுகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு அரசு கால்நடைப்
பண்ணையில், குறைந்த தீவனத்தில் அதிக பால் தரும் பஞ்சாப், ஹரியாணாவின் ஷாகிவால் நாட்டு
இனப் பசு மாடுகள், நேரடி இனவிருத்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் விவசாயிகளுக்கு
வழங்கப்பட உள்ளன.
காரைக்குடி செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில்
கால் நடைகள், நாட்டுக் கோழிகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்
றன. இதில், வெளிமாநிலங்களில் உள்ள நாட்டு இன மாடுகள் வர வழைக்கப்பட்டு, ஆய்வு மூலம்
அவற்றை நம் பகுதிக்கேற்ற வகை யில் வளர்க்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
மழை, வெயிலை தாங்கி வளரும். நோய் எதிர்ப்பு சக்தியுடைய
நாட்டு இனப் பசு, காளை மாடுகள் மூலம் நேரடி இனவிருத்தியில் உற்பத்தி யாகும் கன்றுகளை
விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் செட்டிநாடு
கால் நடைப் பண்ணையில் மட்டுமே ராஜஸ்தான் மாநில தர்பார்க்கர் என்னும் நாட்டு மாடுகளை
ஆய்வின் அடிப்படையில் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றனர்.
தற்போது, குறைந்த தீவனத்தில் அதிக பால் சுரக்கும்
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் ஷாகி வால் எனும் நாட்டு இன மாடுகள் காரைக்குடி கால்நடைப்
பண் ணைக்கு வரவழைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர்
விஸ்வநாதன் கூறியதாவது:
அரசு கால்நடைப் பண்ணையில் ராஜஸ்தானின் தர்பார்க்கர்
இன மாடுகளை நேரடி இனவிருத்தி மூலம் உற்பத்தி செய்து கன்றுகளை ஏற்கெனவே வழங்கி வருகிறோம்.
தற்போது குறைந்த தீவன செலவில் அதிக பால் தரும் பஞ்சாப், ஹரி யாணாவின் ஷாகிவால் என்னும்
நாட்டு இனப் பசு மாடுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இவ்வகை மாடுகளின் பால் தரமாக இருக்கும்.
இவை மழை, வெயில், காலமாற்றத்தை தாங்கி வளரும்.
இவ்வகை மாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி திறன் உடையவை.
வளர்ப்பு முறை, பராமரிப்பு செலவு குறைவு. ஒரு நாளுக்கு 13 முதல் 15 லிட்டர் பால் தரும்.
நேரடி இனவிருத்தி மூலமும், உறைவிந்து மூலமும் கன்றுகள் உற்பத்தி செய் யப்பட்டு முன்னுரிமை
அடிப் படையில் விவசாயிகளுக்கு வழங் கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7624532.ece
No comments:
Post a Comment