பெரம்பலூர்
மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயப் பெருமக்களுக்கு
சின்ன வெங்காயம் சாகுபடி பயிற்சி, மண்வள மேலாண்மைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள்
வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் சிறுவாச்சூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின்
கீழ் மண்வள மேலாண்மை பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பெரம்பலூர் உழவர்
பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் .எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில்
சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும், அட்மா பண்ணை மகளிர் குழு விவசாயிகள்
கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீதா மண்வளம்
மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியத்துவம் பற்றியும், மண்ஆய்வு முடிவுபடி உரமிடுதல்
பற்றியும் விளக்கி கூறினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தயாமதி மண்வள அட்டையின்
பயன்பாடுகள் பற்றி விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் வேளாண் பயிர்களில்
களைக்கொல்லி இடுதல், நீர் மேலாண்மை உத்திகள், சாகுபடி முறைகள், நோய் மற்றும் பூச்சி
தாக்குதல், கட்டுபடுத்தும் முறைபற்றி எடுத்துக் கூறினார்.இப்பயிற்சியில் இரு விவசாயிகள்
தங்கள் அனுபவங்களை பயிற்சியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். நடமாடும் மண்ஆய்வுக் கூட
வாகனம் மூலம் மண்மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ரோவர் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு
மாணவிகளும் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
http://www.dailythanthi.com/News/Districts/Perambalur/2015/09/07024153/Soil-management-training-to-farmers.vpf
No comments:
Post a Comment