Monday, September 7, 2015

நெல் இயந்திர நடவு: மானியம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்



நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று, சித்தாமூர் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கிட சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சித்தாமூர் வட்டாரப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நடவு இயந்திரம் மூலமே நெல் நாற்று நடவுகின்றனர். இதற்காக நடவு இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்தி நடவு செய்கின்றனர்.
இதனால், நடவுச் செலவாக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டர் (2.5 ஏக்கர்) வரை அரசு மானியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
இந்த மானியத்தைப் பெற விவசாயிகள் தங்களது நிலத்தில் இந்திரத்தைக் கொண்டு நடவு செய்ததைப் புகைப்படம் எடுத்து, அரசு வழங்கிய அடையாள அட்டை, தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் போன்ற அனைத்து விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
பின்னர் அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில் மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_chennai/kanchipuram/2015/09/08/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/article3015625.ece

No comments:

Post a Comment