Thursday, September 10, 2015

பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டம் தமிழகத்திற்கு ரூ.166 கோடி ஒதுக்கீடு




பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டத்தை, தமிழகத்தில், ஐந்து ஆண்டு களுக்கு செயல்படுத்த, 166 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது. வேளாண்துறையின் அங்கமான, நீர்வடிப்
பகுதி மேம்பாட்டு முகமை மூலம், ஆறு ஆண்டுகளாக, தமிழகத்தில், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை, உரியமுறையில் பயன்படுத்தி, விவசாயிகளை அதிகளவில் பயனடைய செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்கான செலவை, மத்திய அரசு, 90 சதவீதமும், மாநில அரசு, 10 சதவீதமும் பகிர்ந்து கொள்கின்றன. 

இத்திட்டம் மூலம், நிலங்களை சமன்படுத்துதல் , வரப்புகள் அமைத்தல்கல்வரப்பு அமைத்தல் கோடை உழவு செய்தல், தாவரங்களை பயன்படுத்தி வரப்பு அமைத்தல்,புதிய குளங்கள், ஊருணி கள், பண்ணை குட்டை கள், கசிவுநீர் குட்டை கள், குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை துார் வாருவதல், தடுப்பணைகள் கட்டுதல், பழ மரகன்றுகள் நடுதல்
வேளாண் காடுகள் அமைத்தல், வீட்டுதோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், பண்ணை சார்ந்த தொழில்கள் துவங்க, விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய் மானியமும், சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லாத சுழல்நிதியும் வழங்கப்பட்டது. நிலமற்ற விவசாயிகள் மற்றும் பயனாளிகள் குழுக்களுக்கும் மானியம் தரப்பட்டது. 
தற்போது, இந்த திட்டமானது, மத்திய அரசின் புதிய திட்டமான, பிரத மரின் விவசாய நீர்ப்
பாசன திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆறு ஆண்டுகளில், 26 மாவட்டங்களில் உள்ள, 2,763 பகுதிகள் பயன் அடைந்தன. தற்போது, இந்தத் திட்டம், பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டமாக மாற்றப்பட்டு, 3.81 லட்சம் ஏக்கரில், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த உள்ளது. இதற்காக, மத்திய அரசு, 191 கோடி ரூபாய் வழங்க சம்மதம் தெரிவித்து, இதுவரை 166 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மாநில அரசு தன் பங்கிற்கு, 31 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1338501

No comments:

Post a Comment