பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை வேளாண்மை உதவி
இயக்குநர் தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கபிலர்மலை வட்டாரத்தில் சுமார் 6 ஆயிரத்து
500 ஹெக்டேர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு அறுவடைக்கு
பின் கட்டைப்பயிர் சகுபடியின்போது கரும்பு சோகையை தீயிட்டு எரித்து,அதன்பின் சாகுபடி
செய்வது விவசாயிகளின் வழக்கமாக உள்ளது. அவ்வாறு தீயிடாமல் கரும்பு அறுவடைக்கு பின்
வயலில் உள்ள சோகையை இயந்திரம் மூலம் தூளாக்கி ,மண்ணில் மட்க வைத்து மண் வளத்தை அதிகரிக்கும்
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்ச மானியமாக ரூ.2 ஆயிரத்து
500 வீதம் 2 ஹெக்டேருக்கு ஒரு விவசாயி இத் திட்டத்தில் பயன்பெறலாம். கரும்பு ஆலை மூலமாகவே
அல்லது தனியார் இயந்திரம் மூலமாகவோ கரும்பு சோகையைத் தூளாக்கி அதற்கான புகைப்படத்துடன்
விவசாயிகள் கபிலர் மலை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கரும்பு பயிர் செய்தமைக்கான அடங்கல்
நகல், இரண்டு புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க
நகல் ஆகியவற்றோடு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய மானியத்தொகை ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரத்து
500 வீதம் மானியமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு
கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலரைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என வேளாண்மை
உதவி இயக்குநர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2015/09/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE/article3013300.ece
No comments:
Post a Comment