Thursday, September 10, 2015

புதுவை மீனவர்களுக்குப் படகுகள் முதல்வர் ரங்கசாமி வழங்கல்


புதுவையில் மீனவர்களுக்கு மானிய உதவியுடன் படகுகளை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை வழங்கினார்.

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இந்த (2014 15) ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய நல உதவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
புதுவையைச் சேர்ந்த நான்கு சிறு மீனவ பயனாளிகளுக்கு, 50 விழுக்காடு மானிய உதவியுடன், புதுவை மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனம் மூலம், தலா ரூ.33 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலையுடன் கூடிய, இயந்திரம் பொருத்தப்படாத கண்ணாடி நுண்ணிழையால் செய்யப்பட்ட படகுகள் வழங்கினர்.
புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர்  ரங்கசாமி, பயனாளிகளுக்கு இந்த நல உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது, மீன்வளத்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் டி.தியாகராஜன், மீன்வளத்துறை இயக்குநர் மேரி சின்னராணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.


http://www.dinamani.com/edition_villupuram/puducherry/2015/09/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95/article3020391.ece

No comments:

Post a Comment