Tuesday, September 1, 2015

மிஷின் நடவுக்கு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்



கோபி: இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மானியம் வழங்குகிறது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 1,200 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இயந்திரம் மூலம் நடவு செய்ய ஏக்கருக்கு, 12 கிலோ விதை நெல் தேவைப்படுகிறது. இதில், நெல் விதைகள், 80 பிளாஸ்டிக் டிரேயில், நாற்றுகள், 14 முதல், 20 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு, பின் இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது. இந்த தகவலை, டி.என்.பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Source: 

 

No comments:

Post a Comment