பருத்திச் செடியில் மாவு பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முக்கூடல் வேளாண் உதவி இயக்குநர் க. கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாப்பாக்குடி வட்டாரம் ஓடைமறிச்சான் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடியில் மாவுப் பூச்சித் தாக்குதல் தென்படுகிறது. இந்த தாக்குதலைக் கட்டுப்படுத்த களைகளை அகற்றி வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பெண்ணெய் 2 லிட்டர் அல்லது வேப்பங்கொட்டை பருப்புச் சாறு 5 லிட்டர் அல்லது மீன் எண்ணெய் மற்றும் சோப்பு கரைசல் 1 லிட்டர் நீருக்கு 25 கிராம் என்றளவில் கலந்து தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாகத் தென்படின் புரபனோபாஸ் 2 மில்லி வீதம் 1லிட்டர் நீரில் கலந்து பயிர் நன்கு நனையுமாறு 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.
Source : Dinamani
No comments:
Post a Comment