ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். சுவைக்காக பனங்கற்கண்டு சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர உயிரணுக்கள் அதிகரிக்கும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை வாங்கி புளியங்கொட்டை அளவுக்கு எடுத்து அரை டம்ளர் நீரில் இரவில் ஊறவைக்கவும். காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர உயிரணு குறைபாடு நீங்கும். ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாடுகளை போக்கும் தன்மை முருங்கைக்கு உண்டு. முருங்கை பூ, காய், இலை ஆகியவை உயிரிணுக்கள் அதிகரிக்க பயன்படுகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், ஆவாரம் பூ, பாதாம், பால், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் நெய் விடவும். இதனுடன் ஆவாரம் பூ சேர்த்து வதக்கவும்.
அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். பின்னர், பால் ஊற்றி வேக வைத்து பனங்கற்கண்டு சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை காலை வேளையில் சுமார் 3 மாதங்களுக்கு எடுத்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை, பயணத் தன்மை அதிகரிக்கும். ஆவாரம் காய், இலை, பூ ஆகியவை மருந்தாகிறது. அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், அமுக்ரா சூரணம், பனங்கற்கண்டு, பால். அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடியுடன், ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.
இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இரவு தூங்கபோகும் முன்பு இதை குடித்துவர உயிரணு குறைபாடு நீங்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். நாட்டு மருந்து கடைகளில் அமுக்ரா சூரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 5 முதல் 10 மில்லி அளவுக்கு வெற்றிலை சாறு எடுக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரிசி திப்பிலியை வாங்கி பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, வெற்றிலை சாறுடன் கலந்து கொடுத்துவர நெஞ்சக சளி கரையும். சுவாச கோளாறுகள், இருமல் குணமாகிறது.

Source : Dinakaran
No comments:
Post a Comment