குன்னூர்: கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழக்கண்காட்சி நடைபெறுகிறது. சிம்ஸ் பூங்காவில் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பாய்மரக்கப்பல், கலங்கரை விளக்கம், ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு வகையான பழங்களும், அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
பலா, திராட்சை, ஆரஞ்சு, அண்ணாசி, மட்டுமின்றி அரியவகை பழங்களும் அரங்குகளை அலங்கரிக்கின்றன. கண்காட்சிக்காக சுமார் 5 டன் பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குமரி, மதுரை, சேலம், திருச்சி, தருமபுரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை துறை சார்பில் பயிரிடப்பட்ட பழங்களை கண்காட்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ![]() |
No comments:
Post a Comment