Friday, October 23, 2015

கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.479 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது கலெக்டர் ஜெயந்தி பேட்டி



கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.479 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஜெயந்தி கூறினார்.

ஆய்வு

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் கடன் பெற்று கரூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ள பல்வேறு விவசாய நிலங்களை கலெக்டர் ஜெயந்தி நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2-ம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 2011-2012-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 770 பயனாளிகளுக்கு ரூ.92 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று 2012-2013-ம் ஆண்டில் 22 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு ரூ.112 கோடியே 60 லட்சமும், 2013-2014-ம் ஆண்டில் 23 ஆயிரத்து 919 பயனாளிகளுக்கு ரூ.132 கோடியே 21 லட்சமும், 2014-2015-ம் ஆண்டில் 23 ஆயிரத்து 420 பயனாளிகளுக்கு ரூ.141 கோடியே 73 லட்சமும் என கடந்த 4 ஆண்டுகளில் 91 ஆயிரத்து 74 பயனாளிகளுக்கு ரூ.479 கோடியே 44 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் கரூர் மாவட்டத்தில் 84 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி விவசாயிகளின் உடனடி தேவைகளை அறிந்து வேளாண் இடுப்பொருட்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. 

நகைக்கடன்கள்

விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விவசாயப்பணிகள் தங்குதடையின்றி மேற்கொள்ள 84 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி முதலீட்டுக்கடன் முன்னேற்றத்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 312 பயனாளிகளுக்கு ரூ.28 கோடியே 21 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள், கறவை மாடுகள் மற்றும் தொழில்முனைவோருக்கான கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

மேலும் மாவட்டத்தில் 70 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான மருந்து தெளிப்பான், உழவு எந்திரங்கள் போன்ற உபகரணங்கள் வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறி னார்.

சிறந்த லாபம் 

கூட்டுறவுத்துறையின் வேளாண் கடன் சங்கம் மூலம் கடன் பெற்று மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வரும் புன்செய் கடம்பக்குறிச்சியை சேர்ந்த சகுந்தலா கூறும்போது, கடந்த 40 ஆண்டுகாலமாக நாங்கள் விவசாய பணிகளைசெய்து வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் விலை ஏற்றத்தின் காரணமாக விவசாயப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற மனக்குழப்பத்தில் இருந்த என்னை போன்ற பல விவசாய குடும்பங்களுக்குஏற்றம் காணும் விதமாகமுதல்-அமைச்சர் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி சிறு விவசாயிகள் திட்டங்களை பயன்படுத்தி பணப்பயிர் எனகருதப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டு 100 சதவீதம் மகசூல் பெற்று சிறந்த லாபம் பெற்று வருகிறோம் என்றார். 


http://www.dailythanthi.com/News/Districts/Karur/2015/10/23025422/In-the-last-4-years-in-Karur-district-collector-Jayanti.vpf

No comments:

Post a Comment